மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் மற்றும் புனித மாதங்களில் ஒன்றாகும். இதனை ஒட்டி நாகூர் தர்காவில் உள்ள யா ஹூசைன் பள்ளியில் நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக ஹஸ்ரத் இமாம் ஹசன் ரலி ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ரலி ஆகியவர்களின் பெயரில் பாத்திஹா நடைபெற்றது. பின்னர் பல தானியங்கள் போட்டு சமைக்கப்பட்ட சாப்பாடு தப்பருக்காக வழங்கப்பட்டது.
நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது காஜி ஹுசைன் சாஹிப், பரம்பரை டிரஸ்டிகள் சுல்தான் கலிபா சாகிப், அபுல் பதஹ் சாகிப், செய்யது முகமது கலிபா சாகிப், ஹாஜா நஜிமுதீன் சாகிப், சுல்தான் கபீர் சாகிப், பாக்கர் சாகிப், செய்யது யூசுப் சாகிப், சேக் ஹசன் சாகிப் உள்ளிட்ட பரம்பரை அறங்காவலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக அரபு மொழியில் துக்க கவிதை வாசிக்கப்பட்டது. இதனை மரூசியா என்று அழைக்கின்றனர். நாகூர் முக்கிய வீதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று இதனை ஓதியவர்கள் இஸ்லாமியர்கள் சென்றனர். நாகூர் தர்கா கிழக்கு வாசலில் காலை 10:30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு நாகூர் கடற்கரையில் பகல் 12:30 மணி அளவில் முடிவடைந்தது.