பாசன வாய்க்காலை தூர்வாரிய விவசாயிகள்

81பார்த்தது
பாசன வாய்க்காலை தூர்வாரிய விவசாயிகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஏனங்குடி திருச்செங்காட்டங்குடி இடையே முக்கிய பாசன வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் புளியங்குடி, பண்டார புளியங்குடி பகுதிகளுக்கு பாசன வாய்க்காலாகவும், தேப்பிரமங்கலம், கட்டளை புளியங்குடி, ஏனங்குடி பகுதிகளுக்கு வடிகால் வாய்க்காலாகவும் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிற்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாய்க்காலை தூர்வார வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் திருமருகல் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் வாய்க்கால் தூர்வார படாததால் அப்பகுதியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் முத்துக்குமார் மற்றும் விவசாயிகள் மார்க்கேசன், துரைசாமி, செல்வம், மணிகண்டன், பாலமுருகன், உத்திராபதி, ஜீவானந்தம் ஆகியோர் தங்களது சொந்த செலவில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்காலை தூர்வாரி கொண்டனர். மேலும் வரும் ஆண்டில் வாய்க்கால் முழுவதையும் தூர்வாரி சேதமடைந்து கிடக்கும் வாய்க்கால் மதகுகளையும் சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி