வைத்தீஸ்வரன் கோவிலில் கோலப்போட்டி

82பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பேரூர் கழகம் மற்றும் கலைப்பிரிவு சார்பில் கோலப்போட்டி பேரூர் கழக செயலாளர் போகர் ரவி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவம் ரங்கோலி உள்ளிட்ட கோலங்களை வரைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலை பிரிவு செயலாளர் ஷீலா உள்ள அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி