தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 125. 20 மி. மீ. மழை

57பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 42. 81 மி. மீ. மழை பதிவானது. இதில், அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 125. 20 மி. மீ. , மழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 4. 30 மணி நிலவரப்படி சீா்காழியில் 5, கொள்ளிடத்தில் 6, செம்பனாா்கோவிலில் 2. 6 மி. மீ மழை மட்டுமே பதிவாகியிருந்தது. அதன்பின்னா் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை தொடங்கியது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை மாலை 4. 30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில்: மயிலாடுதுறையில் 32. 50, மணல்மேட்டில் 19, சீா்காழியில் 20. 60, கொள்ளிடத்தில் 27. 20, தரங்கம்பாடியில் 125. 20, செம்பனாா்கோவிலில் 32. 40 என்ற அளவில் மழை பதிவானது. சராசரியாக மாவட்டத்தில் 42. 81 மி. மீ. , மழை பெய்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி