வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று டெல்டா கரையோரம் நெருங்கி வரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோர கிராமங்களான சந்திரபாடி, மாணிக்க பங்கு உள்ளிட்ட பகுதிகளில் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் கடல் அலைகளும் கூடுதலாக வருகின்றது. கடலின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.