50 ஆண்டுகளுக்குப் பிறகு யானை மீது திருமுறை வீதி உலா

582பார்த்தது
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் யானை மீது திருமுறை வீதி உலா உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழாவை முன்னிட்டு யானையின் மீது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஏற்றி நடைபெற்ற இந்த வீதி உலாவில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்ற வழிபாடு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி