வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 9 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்த வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார். புயல் மற்றும் மழையால் காயமடைந்த நோயாளிகளுக்கு, மருத்துவ முகாம்களில், 'டெட்டனஸ் டாக்ஸாய்டு' தடுப்பூசி வழங்கப்படும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நீரினால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க, அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தற்காலிக தங்குமிடங்களில் இருப்பவர்கள், அங்கு வழங்கப்படும் குடிநீரைதான் பயன்படுத்த வேண்டும். குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே, உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை விரைந்து அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.