சர்வதேச டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் புதிய சாதனை

75பார்த்தது
சர்வதேச டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் புதிய சாதனை
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று (பிப்ரவரி 23) ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இன்றையப் போட்டியில் அடித்த ஒரு சிக்ஸருடன் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 126 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you