பீகார் மாநிலம் தோப்னி கிராமத்தைச் சேர்ந்த சிக்கந்தர் யாதவ், இவருக்கும் திலேஷ்வர் தர்வே மற்றும் கீதா தேவியின் மகளுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சிக்கந்தரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாமியார் வீட்டிலேயே சிக்கந்தர் தங்கியிருந்துள்ளார். அப்போது சிக்கந்தருக்கும், கீதாவுக்கு நெருக்கம் அதிகரித்து காதலாக மாறியுள்ளது. இதனை கையும் களவுமாக பிடித்த திலேஷ்வர், பஞ்சாயத்தைக்கூட்டி ஊர் மக்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் பதிவு திருமணமும் நடந்துள்ளது.