மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலக சுவற்றில் நேற்று (நவ. 21) அடுத்த மாதம் வரும் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அமமுகவினர் அவரின் உருவ படத்துடன் சுவர் விளம்பரம் வரைந்து கொண்டிருந்தனர்.
இது குறித்து சார் பதிவாளர் ஜியாவுதீன் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதையறிந்த அங்கு வந்த திமுக நிர்வாகிகளும் சார் பதிவாளரிடம் சுவர் விளம்பரம் வரை அனுமதிக்க கூடாது என முறையிட்டனர். அப்போது அமமுகவினர் திமுகவினரிடம் திடீரென வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் அரசு அலுவலக சுவற்றில் அரசியல் கட்சி விளம்பரங்கள் வரைய கூடாது என அமமுகவினரிடம் தெரிவித்ததோடு, அச்சுவர் விளம்பரத்தை அழிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.