மதுரை: பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு

79பார்த்தது
மதுரை: பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் அருகே எலக்ட்ரீசியன் ஆனந்தன் (42) தனலட்சுமி தம்பதியர் வசித்த பழமையான வீட்டை இடித்து விட்டு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட நேற்று(செப்.29) காலை அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது.

அப்போது தொழிலாளர்கள் 5 அடி தோண்டிய போது ஒன்றரை அடி உயரம் கொண்ட ஆண்டி அவதார முருகன் சிலை கிடைத்தது. கற்சிலையான அதனை, அப்பகுதி கோயில் அருகே வைத்து கிராமத்தினர் வழிபட்டனர். இதனையறிந்த விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர், அசோக்குமார், தனிப்பிரிவு போலீஸ் அய்யர் மூலம், சிலையைக் கைப்பற்றி உசிலம்பட்டி துணைத் தாசில்தார் மணிமேகலை, வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். நாகையா என்ற சிற்பியிடம் ஆனந்தனின் தாத்தா இந்த இடத்தை வாங்கியதாகவும் இதனால் சிற்பி செதுக்கிய பழமையான சிலையாக இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி