மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தே. கல்லுப்பட்டி ஜோசியர் தெருவைச் சேர்ந்த காமாட்சி மகன் வேல்மணிகண்டன் (47) என்பவர் தே. கல் லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் இருந்த வேகத் தடையை கவனிக்காமல் அவர் வேகமாகச் சென்றுள்ளார். இதனால் அவர் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இவருக்கு தலையில் பலத்த காயமடைந்ததால் வேல் மணிகண்டன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து தே. கல்லுப்பட்டி போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.