மேலூர் சந்தை தினசரி கடைகள் ஏலம் ஒத்திவைப்பு.

74பார்த்தது
மேலூர் சந்தை தினசரி கடைகள் ஏலம் ஒத்திவைப்பு.
மதுரை மேலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை கடைகள் குத்தகை உரிமை பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி பெறுவது சம்பந்தமாக நாளை 4ம் தேதி பொது ஏலம் விடப்படும் என்று நகராட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று 2ம் தேதி பொது ஏலத்தில் கலந்து கொள்வதற்காக விவசாயிகளும், ஏலதாரர்கள், டி. டி. (காச சோலை) எடுத்து நகராட்சிக்கு அலுவலகத்திற்கு காலையில் வந்து குவிந்தனர். தொடர்ந்து காத்திருந்த ஏலதாரர்களும், விவசாயிகளும் திடீரென்று ஏலம் ஒத்தி வைப்பதாக தேதி குறிப்பிடாமல் நகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். அந்த நோட்டிஸில் 30. 08. 24- ந்தேதி அன்று ஆணையாளர் கையொப்பம் இல்லாமல் ஆணையாளர் கையொப்பம் முத்திரை மட்டும் இருந்ததால் நகராட்சி ஏலம் எடுக்க வந்த ஏலாதாரர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். நகராட்சி நிர்வாகத்தினர் பொது ஏலம் 30ஆம் தேதியன்று ஆன்லைனில் ஏலம் ஒத்திவைத்திருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து விவசாயிகள் நகராட்சி தினசரி சந்தை ஏலத்தை பொதுமக்கள் தெரியும் வகையில் ஒலிபெருக்கி மூலமாகவும், சுவரொட்டி மூலமாகவும், தினசரி நாளிதழ் மூலம் விளம்பரம் செய்து பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்கும் என்று கடை ஏலதாரர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :