மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள்!!

75பார்த்தது
மதுரையில் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை எதிரொலி தீபாவளி நாளில் மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள் களைகட்டிய தீபாவளி மதுவிற்பனை

மதுரை மாவட்டத்தில் மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் தீபாவளி தினமான இன்று காலை 12 மணிக்கு அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்

மூன்று நாள் விடுமுறைக்கு பின்பாக அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மது கடைகள் முன்பாக 12 மணிக்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை பை பையாக வாங்கி சென்றனர்.

இதேபோன்று காலை 11 மணிக்கு மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்ட நிலையில் கூடல் நகர் , செல்லூர் அண்ணா பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் உள்ள மனமகிழ் மன்றங்களில் கூட்டம் கூட்டமாக குவிந்த மது பிரியர்கள் மதுபானங்களை கட்டை பைகளிலும் பைக்குகளிலும் எடுத்துச் சென்றனர்

மதுபான கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மது பிரியர்கள் குவிந்ததால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி