மதுபோதையில் இளைஞர்கள் அட்டூழியம்.!!

57பார்த்தது
மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் இளைஞர்கள் அட்டூழியம்: சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி டூவீலரில் வந்த நபரை போதையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதே இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுதியில் டூவீலரில் வந்த மற்றொரு நபரை தாக்கியதோடு அருகில் இருந்த கடையை சூறையாடி கடையில் இருந்த பெண்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி