மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி, 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்டத்தின் சிறந்த வங்கிக்கான கேடயத்தை பெற்றுள்ளது. இந்த விழாவில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி, சோழவந்தான் கூட்டுறவு வங்கிக்கு இந்தப் பெருமைமிக்க விருதை வழங்கினார்.