"குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம்"

79பார்த்தது
"குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம்"
தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி, ஆடல், பாடல், விளையாட்டு என்று வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தைப் பருவத்தில், சில குழந்தைகள் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைப்பது மிகவும் கொடுமையான செயலாகும். நல்ல குடிமக்களாக உருவாக வேண்டிய குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே தொழிலாளர்களாக மாறுவதால் ஒரு நாடு தனது சமூக வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், அமைதி, சமூகத்தின் சமச்சீர் தன்மை மற்றும் ஆற்றல் மிக்க மனித வளத்தையும் இழக்க நேரிடுகிறது" என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you