கிருஷ்ணகிரி: காங்கிரஸ் கட்சி சார்பில் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி

56பார்த்தது
கிருஷ்ணகிரி: காங்கிரஸ் கட்சி சார்பில் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னை இந்திரா காந்தியின் 40-ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அன்னை இந்திராகாந்தியின் திருஉருவச்சிலை முன்பாக நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, முன்னால் ஊராட்சி மன்றத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் அன்னை இந்திரா காந்தியின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மதியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து முன்னால் வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் அப்பாவு கவுண்டர், வெங்கடேன், சங்கர், பாண்டுரங்கன், சத்திவேல் மற்றும் முன்னால் மாவட்டத் தலைவர் ஷானவாஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புல்லட் காந்தி, மாணிக்கம், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியினையும் எடுத்துக் கொண்டனர். மேலும்இந்த நினைவு அஞ்சலியின் போது கிராம மக்களும் கலந்துக் கொண்டு அன்னை இந்திராகாந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி