கரூர் மாவட்டம் குளித்தலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று (செப்.12) நடைபெற்றது. குளித்தலை வட்ட தலைவர் வாசுகி தலைமை வகித்தார். சிஐடியு ரத்தின சபாபதி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்.