கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் நெல் நாற்று பயிரிட்டுள்ளனர். அதனையடுத்து தங்கள் விளைநிலங்களில் மண்ணை பதப்படுத்தி நெற்பயிர் நடவு செய்யும் பணியில் இன்று (செப்.,14)ஈடுபட்ட வருகின்றனர். இதேபோல் நங்கவரம், நெய்தலூர் காலனி, சேப்பலாப்பட்டி, முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நெல்நாற்று நடவு செய்யும் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.