புனித கிருஸ்தீனம்மாள் ஆலயத்தில் புத்தாண்டு விழா

69பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை ஆர். எஸ் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த புனித கிருஸ்தீனம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டு தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியை பங்குத்தந்தை அல்போன்ஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கான சாக்குப்போட்டி, பானை உடைத்தல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பெண்களுக்கான மியூசிக்கல் சேர், பந்து எறியும் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தாண்டு தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. புத்தாண்டு விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டினை புனித அன்னை அருட் சகோதரிகள், அன்பிய மக்கள், பங்கு இளைஞர்கள் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி