

கோவில்பாளையம்: கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
கோவில்பாளையம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது. கஞ்சா பறிமுதல். கரூர் மாவட்டம், புலியூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் செய்யது அலிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணியளவில், புலியூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள தென்னந்தோப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் மகன் ராம்குமார் என்கிற ராம்கி வயது 30 என்பவரை கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ராம்கி மீது வழக்கு பதிவு செய்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர்.