கிருஷ்ணராயபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

69பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு அய்யர்மலையில் செயல்பட்டு வரும் நுகர் பொருள் வாணிப கழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை கலெக்டர் தங்கவேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேப்பங்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறை நிறைகளை கேட்டு அறிந்தார்.

இதேபோல் வயலூர் ஊராட்சியில் தாட்கோ பொது மேலாளர் செந்தில் வேலன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுமான பணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் இருக்கையில் குறித்து ஆய்வு செய்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் கூடத்தையும் உணவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களிடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாகவும் தரமாகவும் சமைத்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து வேப்பங்குடியில் செயல்பட்டு வரும் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து செவிலியர்களிடம் பொதுமக்கள் மருத்துவ சேவை குறித்து கேட்டறிந்தார்.


பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி