கடவூர் தெற்கு ஒன்றிய விசிக சார்பில் வீரவணக்கம் நிகழ்ச்சி

60பார்த்தது
கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடவூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தரகம்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் குமணன் தலைமை வகித்து அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துவி வீரவணக்கம் செலுத்தினார். இதில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கடவூர் ராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் முத்து வளவன், முகாம் நிர்வாகிகள் சீதப்பட்டி சின்னச்சாமி, முத்தகவுண்டம்பட்டி ராகவன்,. வெங்கடாஜலபதி, பாலசுப்பிரமணி, நவீன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி