கரூர் மாவட்டம், காக்காவடி, கீழ பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் வயது 48. இவர் ஏப்ரல் 14ம் தேதி மதியம் 1:30 மணி அளவில், தனது நண்பர்களுடன் சேலம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அமராவதி ஆற்று பாலத்தின் கீழே குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த தமிழ்ச்செல்வனின் தாயார் நாச்சம்மாள் வயது 65 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது தமிழ்ச்செல்வன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.