குடும்பத் தகராறில் கைகளால் மாமியாரை தாக்கிய மருமகன் கைது.

64பார்த்தது
குடும்பத் தகராறில் கைகளால் மாமியாரை தாக்கிய மருமகன் கைது.
குடும்பத் தகராறில் மாமியாரை தகாத வார்த்தை பேசி தாக்கிய மருமகன் கைது.


கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜாமணி வயது 50.

இவரது மகளை கடவூர் தாலுக்கா, சந்துவார்பட்டி பகுதியைச் சேர்ந்த மலையாளன் மகன் பாண்டியராஜன் வயது 27 என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார் பாண்டியராஜனின் மனைவி.

இதனிடையே, பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 5 மணி அளவில், பாண்டியராஜன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மேலும், ஏற்கனவே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, தன்னிச்சையாக சென்று, தகாத வார்த்தை பேசி, மாமியாரை திட்டியதோடு, கைகளால் தாக்கி மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜாமணி, பாலவிடுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மாமியாரை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி மிரட்டிய பாண்டியராஜனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பாலவிடுதி காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி