நாகம்பள்ளியில் கிணற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா அபிபாளையம் செட்டிபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது 45.
இவர் தனது நண்பர் மூர்த்தி என்பவர் உடன் நவம்பர் 3-ம் தேதி மதியம் 2: 30 மணி அளவில், நாகம்பள்ளி அணை கருப்பசாமி கோவில் அருகே, சிவக்குமார் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.
எதிர்பாராத விதமாக பிரகாஷ் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த பிரகாஷின் மனைவி ஜானகி வயது 41 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பிரகாஷின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.