நடந்து சென்றவர் மீது ட்ராவலர் வேன் மோதி விபத்து. படுகாயம்.

80பார்த்தது
காமக்காபட்டி பிரிவு அருகே நடந்து சென்றவர் மீது ட்ராவலர் வேன் மோதி விபத்து.

கர்நாடக மாநிலம், பெங்களூர்,
நிலமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் வயது 61.

இவர் நவம்பர் 27 ஆம் தேதி காலை 8 மணி அளவில், சேலம் - மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காமக்காபட்டி பிரிவு சாலையின் அருகே நடந்து சென்ற போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கிழக்கு சாயக்கார தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வயது 62 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ட்ராவலர் வேன், நடந்து சென்ற ஜெயராம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயராமுக்கு கழுத்து மற்றும் வலது இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் தொடர்பாக ஜெயராம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டிராவலர் வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you