திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (67). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் அடகு வைக்க சென்ற போது, இவர் அதே கடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு போலி நகை வைத்து ஏமாற்றியது தெரிய வந்தது. உடனடியாக கடை ஊழியர் பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பரசேரியில் உள்ள ஒரு கடையிலும் போலி நகைகள் வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இரணியல் போலீசார் கிருஷ்ணகுமாரை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரித்தபோது பரசேரி கடையிலும் போலி நகையை வைத்து பணம் பெற்று மோசடி செய்ததை அவர் ஒப்புக்கொன்றார்.
மேலும் குமரி மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத கடைகள், ஆதார் அட்டைகள் வாங்காத அடகு கடைகளை குறிவைத்தும் இவர் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.