குமரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி மயக்கம்.

62பார்த்தது
குமரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி மயக்கம்.
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர மற்ற நாட்களிலும் பொதுமக்கள் அவ்வப்போது மனு அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று (நவம்பர் 09) காலை கலெக்டர் அலுவலகத்துக்கு குறும்பனையை சேர்ந்த அமல ராணி (வயது 60) என்பவர் மனு கொடுப்பதற்காக வந்தார். அவர் நுழைவு வாயில் ஆவின் பாலகம் அருகே நின்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அமல ராணியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி