குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தைப்பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பெருந்திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ந் தேதி தைபூசம் அன்று தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் ஆராட்டு நடைபெறும்.
திருவிழாவையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைப்பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் பிரபாகரகிருஷ்ணன், வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, கோவில் மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் சிதம்பரம் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.