கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 41 வாகனங்களுக்கு இன்று (டிச. 16) ஏலம் நடைபெற்றது. நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஆயுதப்படை வளாகத்தில் ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மொத்தம் 33 வாகனங்கள் பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டன. மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 506 ரூபாய்க்கு வாகனங்கள் ஏலம் போனதாக போலீசார் தெரிவித்தனர்.