தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். உதயநிதிக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதிக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.