கஞ்சா கடத்தியவர்களுக்கு 12 ஆண்டு சிறை.

576பார்த்தது
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளடக்கிய மூன்று மாவட்டங்களின் போதை பொருள் நுண்ணறிவு பிரிவின் தலைமை அலுவலமாக காஞ்சிபுரம் செயல்பட்டு வருகிறது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் பிரபாகருக்கு வந்த ரகசிய தகவலை எடுத்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி மற்றும் காவலர்கள் , தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 47) என்பவர் 22 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது.

அவரை மடக்கி பிடித்து காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் உள்ள போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து பிடிப்பட்ட அந்த நபரிடம் தீவிர விசாரணை செய்த போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டு சென்னை பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப் போவதாக கூறினார். அந்த நபரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அந்த வழக்கில், கஞ்சா கடத்தி வந்த குற்றவாளி ஆறுமுகம் என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி