கட்டுமான பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடல்

56பார்த்தது
கட்டுமான பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடல்
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில், கோனேரிக்குப்பம் ஊராட்சி, இந்திரா நகர் முகப்பு பகுதியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் கட்டுமானப் பணிக்காக, மிக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டது. கட்டுமானப் பணி துவங்கிய இடம், நீர்நிலை புறம்போக்கு என்பதால், அப்பகுதி மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும், கட்டுமானப் பணிக்காக எடுக்கப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே இருந்தது. இதனால், கால்நடைகள் மட்டுமின்றி பாதசாரிகளும் பள்ளத்தில் தவறி விழும் சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து காஞ்சிபுரம் கனக துர்க்கை அம்மன் நகர் மற்றும் அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்தான செய்தி வெளியானதை தொடர்ந்து, நெடுஞ் சாலைத் துறை அலுவலக கட்டுமானப் பணிக்காக, சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளம் நேற்று மூடப்பட்டது.

தொடர்புடைய செய்தி