தாம்பரம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கலியை பறித்து சென்ற பிரபல செயின் பறிப்பு திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி விஜயலட்சுமி(71) நான்கு நாட்களுக்கு முன்பு பிற்பகல் , சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் கடைக்கு சென்று விட்டு நடந்து சென்று கொண்டிருந்த போது மூதாட்டியின் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை கடந்து சென்று இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மூதாட்டியின் பின்னால் சென்று கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார்,
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேலையூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த
பாபு (42) என்பவரை கைது செய்து விசாரித்ததில் மதுரை சுற்றுவட்டார பகுதியில் 20க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது பாபுவிடம் இருந்து ஐந்து சவரன் தங்க சங்கலியை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.