கூடுவாஞ்சேரி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற விவசாய கல்வி முன்னோட்ட நிகழ்வு: தமிழர் மருத்துவ ஆர்வலர் ஞானப்பிரகாசம் பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தனியார் பள்ளியில் விவசாய கல்வி ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழர் வேளாண்மை மற்றும் தமிழர் மருத்துவர் ஞானப்பிரகாசம் பங்கேற்றார்
அப்போது உணவிற்கு அடிப்படையான விவசாயம் சார்ந்த புரிதல் மாணவர்கள் மத்தியில் வளர வேண்டும் விவசாயம் என்பது மண்ணோடு இணைந்த ஆடு மாடு கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு பற்றிய முழுமையான புரிதலை மாணவர்களிடையே வளர்த்து விவசாயம் குறித்து முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என பேசினார்
இந்த நிகழ்வில் தமிழக கல்வியாளர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் அருணா, தமிழக இயற்கை வேளாண் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நிறுவனர் செந்தில்குமார் பள்ளி தாளாளர் நீலன் , பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.