சித்தாமூர் ஸ்ருதி கலாலயவின் 4-வது சலங்கை பூஜை விழா

67பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரில் இயங்கி வரும் ஸ்ருதி கலாலயா பரதநாட்டிய பள்ளியின் நாலாவது சலங்கை பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ருதி கலாலயாவில் பயிலும் மாணவர்கள் மேற்கத்திய நடன நிகழ்வும் முதல் நிகழ்வாக நடைபெற்றது. விழாவிற்கு சுருதி கலாலயாவின் நிறுவனரும், பரதநாட்டிய ஆசிரியருமான மோகன்ராஜ் தலைமை தாங்கினார். யோகா ஆசிரியர் தங்கராஜ் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றன. பரதநாட்டிய பள்ளியில் பயின்ற சான்விதான்யா,
ஷர்னிதா, ரவீனா, ஷவானி, சாதனா ஆகிய மாணவிகளுக்கு பரதநாட்டிய ஆசிரியர் மோகன்ராஜ் வலது காலில் சலங்கை அணிவித்து ஆசி வழங்கினார் மாணவிகளின் இடது காலில் அவர்களது பெற்றோர்கள் சலங்கை அணிவித்து அட்சய தூவி வாழ்த்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகை தீபா கலந்துகொண்டு சலங்கை பூஜை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்கினார். திரைப்பட நடன இயக்குனர் விக்ரமாதித்தன், வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பரதநாட்டிய மாணவிகள் புஷ்பாஞ்சலி, கணபதி கௌததுவம், முருகர் கௌத்துவம், அலாரிப்பு
சிவதாண்டவம் உள்ளிட்ட பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினர். இந்த நாட்டிய பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள், அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி