கந்தசுவாமி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா

54பார்த்தது
கந்தசுவாமி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பு அபிஷேகங்களுடன் நடைபெறும். இதையடுத்து, பங்குனி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது.

விடுமுறை நாளான நேற்று, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். மொட்டை அடித்து, சரவண பொய்கையில் நீராடி கந்தசுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

முன்னதாக, பரணி உற்சவத்தில் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானை யுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தார்.

தொடர்புடைய செய்தி