அரசுப் பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

81பார்த்தது
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல், மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசு துறை மூலம் அரசு திட்டங்கள் சேவைகள் ஆகியவற்றை செயல்படு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காணப்பட்ட வருகிறது.

இதிடத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வாலாஜாபாத் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வுக்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பள்ளியில் உள்ள தண்ணீர் கூடங்கள், சமையலறை, விளையாட்டு உபகரணங்கள் போன்றவை தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின் வகுப்பறைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மாணவ மாணவிகள் கலந்துரையாடி பாடம் நடத்தி மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தார்.

மேலும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யாமல் பள்ளி மாணவர்கள் தண்ணீர் தொட்டியை பயன்படுத்துவதால் இதனை கண்காணிக்க தவறிய ஊராட்சி மன்ற தலைவரை கடுமையாக மாவட்ட ஆட்சியர் கண்டித்தார்.

தொடர்புடைய செய்தி