முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

594பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996 மற்றும் 97 ஆம் ஆண்டு படித்த பத்தாம் வகுப்பு முன்னாள் மாணவர்கள் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அதே பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வகுப்பு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மற்றும் நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி மேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செந்தில்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சகா ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் முதலாவதாக தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் சிறு வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து தங்களது பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி கட்டித்தழுவி அன்பை பகிர்ந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி