காஞ்சிபுரம்: பாதை வசதியில்லாத சுடுகாடு; கண்டிவாக்கத்தில் அவலம்

64பார்த்தது
காஞ்சிபுரம்: பாதை வசதியில்லாத சுடுகாடு; கண்டிவாக்கத்தில் அவலம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் அடுத்த துளசாபுரம் கிராமத்தில், கண்டிவாக்கம் கிராம சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வந்தனர். கண்டிவாக்கம் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. ஏற்கனவே செல்லும் மண் சாலையும், போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால், முழங்கால் அளவிற்கு கோரை புல் வளர்ந்துள்ளது.

 இதனால், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு, சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. குறிப்பாக, கோரை புல்லின் நடுவே பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதால், அச்சத்துடன் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, கண்டிவாக்கம் சுடுகாட்டிற்கு பாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி