மரக்கன்று நடும் விழா

54பார்த்தது
மரக்கன்று நடும் விழா
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் காலனி மற்றும் நந்தீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து, கால்வாய்களை துார்வாரி, அதில் தேங்கிய குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள காலி இடங்களில் நகராட்சி சார்பில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நெல்லி, புங்கை, வேம்பு, அத்தி மரம் உள்ளிட்ட மரச் செடிகள் நடப்பட்டன.

இதில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் துாய்மை பணியாளர்கள் பங்கேற்று, நந்திவரம் காலனி சுற்றுவட்டார பகுதியில், மரச் செடிகளை நடவு செய்தனர்.

அதை தொடர்ந்து, 'என் குப்பை; என் பொறுப்பு' துாய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி