கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பாக பொது வணிகம் மற்றும் வணிக இலக்கு என்ற பெயரால் கிராமிய அஞ்சல் ஊழியர்களை நடைமுறை சாத்தியமற்ற இலக்கு நிர்ணயத்தை கடும் நெருக்கடிக்கு உண்டாகும் அஞ்சல் துறை கைவிட வேண்டும், கிளை அஞ்சலகத்தில் துவங்க முடியாத கணக்கினை பிடிக்கச் சொல்லி ஊழியர்களுக்கு நிர்பந்தம் கொடுப்பதை கைவிட வேண்டும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு நிரந்தர பணியானை வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்து உடனடியாக வழங்கிட வேண்டும் பெண் ஊழியர்களிடம் அநாகரிகமாக பெண்மைக்கு எதிராக நடக்கும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுத்துட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று (ஜூலை 23) நடைபெற்றது.  

 மாவட்டத் தலைவர் பி. சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவி செயலாளர் ஜி. வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் டி. ஆனந்த் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தை அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர் என். அருணாச்சலம் கண்டன உரையாற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி