செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய் கோட்டங்கள் அளவில் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்திருந்த நிலையில் செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில் சார் ஆட்சியர் நாராயண சர்மா தலைமையிலும், மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமையிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று(செப்.19) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஏரி மதகுகள் சீரமைக்கப்பட வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து முறைகேடாக பெரும் பணம் திரும்ப வழங்க வேண்டும்.
மின் கம்பிகள் முறையாக பராமரிக்கபடுவதில்லை என்றும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று சார் ஆட்சியர் நாராயணர் சர்மா உத்தரவிட்டார். அனைத்து துறை அரசு அலுவலர்களும் இதில் பங்கேற்றனர்.