சாரல் மழையுடன் கூடிய இரு வானவில் தோன்றிய காட்சி

73பார்த்தது
சாரல் மழையுடன் கூடிய இரு வானவில் தோன்றிய காட்சி
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பே சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.

அவ்வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளில் கோடை மழை சில நாட்களாக பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கன மழை பெய்து பொதுமக்களுக்கு கத்திரி வெப்ப தாக்கத்திலிருந்து சற்று நிம்மதி அளிக்கும் வகையில் குளிர் காற்றுடன் மழை பெய்தது. நேற்று முற்றிலும் மழை இல்லாத நிலையில் மிதமான வெப்பம் மட்டுமே நிலவியதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே வானம் மே மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் உத்திரமேரூரில் எல். எண்டத்தூர் நெடுச்சாலையில் வானில் அழகிய இரண்டு வானவில் தோன்றியது. அதில், ஒன்று மேகமூட்டங்களுக்கு இடையே மறைந்த நிலையில் மற்றொரு வானவில் பளிச் சென்று தெரிந்து. அதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரசித்தபடி சென்றனர்.
தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தவாறு உள்ள நிலையில் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி