கச்சிராயபாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சேவை கிராமமான அரியபெருமானுாரில் யூனி லிங்க் அங்கக நீர்ம உர தயாரிப்பு நிறுவனத்தின் தொழில் நுட்பக் கருத்தரங்கு நடந்தது.
தமிழ்நாடு சர்க்கரை இணையம், செங்கல்பட்டு உயிர் நீர்ம உர ஆராய்ச்சி மையம் இயற்கை முறை கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்களில் நீர் உயிர் உரங்களைத் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. >
இந்த உரங்கள் மற்றும் கரும்பு ஆலையின் கழிவு மண் ஆகியவை கரும்பு வயல்களில் மகசூல் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது குறித்து ஆலையின் கரும்பு அபிவிருத்தி அலுவலர் செந்தில்குமார் விளக்கினார்.