"கேப்டனின் கனவை நிறைவேற்றுங்கள்"

82பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் கேப்டன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது, அவர் எப்போதும் எம்மக்கள், எம்மக்கள் என்று கூறுவார், தமிழ் நாட்டுக்கும், மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நிறைய நன்மைகள் செய்ய வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற வேண்டி தேமுதிக தலைவர் "விஜயகாந்த் போட்டோவாலே" தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மறைவுற்றார், தமிழகமே கண்ணீர் சிந்தியது, நல்ல மனிதர், சிறந்த தலைவர், அவர் மேடையில் பேசும்போது எம்மக்கள், எம்மக்கள் என் தொண்டர்கள் என கூறுவது மட்டுமல்ல அவருக்குளுக்காகவே வாழ்ந்தவர், இன்னும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என்று கனவையும் கண்டார், தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் அவருடைய கனவை நிறைவேற்ற வேண்டி விஜயகாந்த் மனைவியான தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் உருவத்தை "விஜயகாந்த் போட்டோவாலேயே" நீர் வண்ணத்தில் தொட்டு ஐந்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

தொடர்புடைய செய்தி