செம்மண் கடத்திய மூன்று பேர் கைது

69பார்த்தது
செம்மண் கடத்திய மூன்று பேர் கைது
கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பகல் 1. 30 மணியளவில் மலைக்கோட்டாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலைக்கோட்டாலத்தை சேர்ந்த ராமசாமி மகன் அய்யப்பன் என்பவரது நிலத்தில் சிலர் ஜேசிபி வாகனம் மூலம் மூன்று டிராக்டர் டிப்பரில் செம்மண் ஏற்றியுள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு 'சென்றபோது, செம்மண் ஏற்றிய நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். உடன் போலீசார் சிலரை துரத்தி பிடித்து விசாரித்தனர்.

அதில் அரசு அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தி வரும் கள்ளக்குறிச்சி அடுத்த கா. மாமனந்தலை சேர்ந்த ராமு, 50;க்கு செம்மண் கடத்தி சென்றது தெரியவந்தது.

செம்மண் கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி, டிராக்டர் டிப்பர் டிரைவர்கள் மலைக்கோட்டாலம் சேர்ந்த பிச்சைக்காரன் மகன் கலியமூர்த்தி, 43; காட்டனந்தலை சேர்ந்த ராமமூர்த்தி மகன் பாலு, 30; கருப்பன் மகன் சுப்ரமணி, 35; பச்சமுத்து மகன் கணேசன், மலைக்கோட்டாலம் சேர்ந்த சுப்ரமணியன் மகன் செம்மலை(எ) அஜித், 24; மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் ராமு உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் ஒரு ஜே. சி. பி. , இயந்திரம் மற்றும் 2 டிராக்டர் டிப்பர்களை போலீசார் பறிமுதல் செய்து, கலியமூர்த்தி, பாலு, செம்மலை ஆகியோரை கைது செய்தனர்.

தப்பியோடிய சுப்ரமணி, கணேசன் மற்றும் ராமு ஆகியோரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி