கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஜவஹர்லால் இன்று ஓய்வு பெற்றார். இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜவஹர்லால் அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவில் , விழாவின் கதாநாயகனும், ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான ஜவஹர்லால் கலந்து கொண்டு, காவல்துறையில் பணியாற்றிய கடந்த கால அனுபவங்களை எடுத்து கூறினார். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.